Freelancer / 2026 மார்ச் 19 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது கணவனின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறிய சம்பவம் மகாராஷ்டிரா மாநிவத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவனின் அந்தரங்க உறுப்பில் முதலில் பலமாகத் தாக்கிய அந்தப் பெண், ஆத்திரத்தில் அவரது உடலின் பாகங்களை பின்னர் கடித்துக் குதறியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் கணவன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். தனது கொடூரச் செயலை மறைக்க முற்பட்ட அந்தப் பெண், கணவன் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி அக்கம் பக்கத்தினரையும் பொலிஸாரையும் நம்ப வைக்க முயற்சி செய்துள்ளார்.
இருப்பினும், உயிரிழந்தவரின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் பிறப்புறுப்பை பற்களால் கடிக்கப்பட்ட அடையாளங்களைக் கண்டு பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
உடற்கூறாய்வு அறிக்கையில் அது கொலை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, பொலிஸார் அந்தப் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், கள்ளக்காதலால் அரங்கேறிய பயங்கரம் விசாரணையின் முடிவில், தனது கள்ளக்காதலனுடன் தடையின்றி வாழ்வதற்காகவே இந்தத் திட்டத்தைத் தீட்டியதாக அவர் ஒப்புக்கொண்டார். தற்போது அந்தப் பெண்ணையும் அவருக்கு உதவியாக இருந்த கள்ளக்காதலனையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
16 minute ago
34 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
34 minute ago
42 minute ago