2026 மார்ச் 19, வியாழக்கிழமை

எதிர்பாரா ட்விஸ்ட்; விஜய் தேர்தலிலேயே நிற்க முடியாதாம்!

S.Renuka   / 2026 மார்ச் 19 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் போதும்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது. 

கரூர் நெரிசல் விவகாரம், ஜனநாயகன் பட விவகாரம், சங்கீதா விவாகரத்து விவகாரம் என அடுத்தடுத்து சிக்கல்கள் எழுந்துள்ளது. 
இந்த நிலையில், சங்கீதாவின் விவாகரத்து பிரச்சினையால் விஜய் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படலாம் என சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய், தற்போது பல பக்கங்களில் இருந்து இருந்து வரும் சிக்கல்களை ஒரே நேரத்தில் சமாளித்து வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கை முதல் திரைப்பட வெளியீடு வரை பல்வேறு பிரச்சினைகள் தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.

விஜய் நடித்த கடைசி படமான ஜன நாயகன், கடந்த ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சிக்கல்கள் காரணமாக படம் இன்னும் வெளியாகாமல் தாமதமாகி வருகிறது.

சிபிஎப்சி அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், இந்தப் படத்தின் வெளியிட்டுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்பே இந்த படம் வெளியாக வேண்டிய நிலையில், தேர்தல் அறிவித்து வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டிருப்பது விஜய்க்கு ஒரு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் அவரை அரசியல் ரீதியாக சிக்கலில் சிக்க வைத்துள்ளது.

அந்த நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்காக விஜய் டெல்லியில் நேரில் ஆஜராகி நீண்ட நேரம் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த விவகாரம் அவரது அரசியல் இமேஜ் மீது தாக்கம் ஏற்படுத்துமா என்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேநேரத்தில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

விஜய்யின் மனைவி சங்கீதா விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வராத நிலையில், அது தேர்தல் நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. சொல்லப் போனால் விஜய் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் கூட ஏற்படலாம் என்கின்றனர். ஏனெனில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களுடன், வாழ்க்கைத் துணையின் சொத்து விவரங்களையும் கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த வகையில், விவாகரத்து நடைமுறையில் இருந்தாலும் சட்ட ரீதியாக மனைவியாகவே கருதப்படும் சங்கீதாவின் சொத்து விவரங்களையும் விஜய் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதில் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், வேட்புமனு ஏற்கப்படுவதிலேயே சிக்கல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையிலேயே, விஜய் தலைமையிலான தமிழகம் வெற்றிக் கழகம் வரும் தேர்தலில் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது.

ஏற்கனவே பல தொகுதிகளில் வேட்பாளர் தெரிவு நடைபெற்று வரும் நிலையில், விஜய் தானும் பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு போன்ற முக்கிய தொகுதிகளில் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவரை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்தும் வகையில் திமுக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில், ஒரு பக்கம் படம் ரிலீஸ் சிக்கல், மறுபக்கம் சிபிஐ விசாரணை, அதேசமயம் குடும்ப பிரச்சனை, அதற்குமேல் தேர்தல் அரசியல் என பல சவால்களை ஒரே நேரத்தில் எதிர்கொண்டு வருகிறார் விஜய். இந்த சிக்கல்களை அவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே, அவரது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X