2026 மார்ச் 19, வியாழக்கிழமை

கள்ளக் காதலனுக்கு அடித்த Double லக் ; கணவன் ட்விஸ்ட்

Janu   / 2026 மார்ச் 19 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தின் கறுவாத் தொழிலுக்கு புகழ்பெற்ற நகரமொன்றில், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த உதவியாளருக்கு, மனைவியுடன் சேர்த்து பரிசும் வழங்கிய ஒரு வர்த்தகர் பற்றிய சுவாரசியமான செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கறுவாத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு உதவியாக ஒரு இளைஞனும் பணிபுரிந்து வந்துள்ளார். இருவரும் வீடு வீடாக சென்று தொழில் செய்து வந்தனர். வர்த்தகர் தனது உதவியாளருக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கியதுடன், அவரது தேவைகளையும் கவனித்துக் கொண்டுள்ளார்.  உதவியாளரும் முதலாளிக்கு மிகவும் விசுவாசமாக இருந்து தொழில் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

அவர்கள் வீட்டிற்கு அருகாமையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மதிய உணவு எடுத்து வருவதற்காக உதவியாளர் வர்த்தகரின் வீட்டிற்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு உணவு எடுக்க சென்ற உதவியாளர் திரும்பி வருவதற்கு எடுக்கும் நேரம், காலப்போக்கில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், வர்த்தகரின்  மனைவிக்கும் உதவியாளருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஊருக்குள் வதந்திகள் பரவியுள்ளன.

இவற்றை கேட்டும் வர்த்தகர் பதற்றமடையாமல் தனக்கு எதுவும் தெரியாதது போலவே நடந்து கொண்டுள்ளார். தனது மனைவிக்கோ அல்லது உதவியாளருக்கோ எந்த மாற்றத்தையும் காட்டாமல் இருந்துள்ளார். 

காலப்போக்கில், தனது மனைவிக்கும் உதவியாளருக்கும் இடையிலான தொடர்பை அவர் கையும் மெய்யுமாக பிடித்துள்ளார். மறுக்க முடியாத வகையில் ஆதாரங்களுடன் அவர்களை பிடித்த அவர், உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதன்படி, மூன்று தரப்பினரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது, தனது மனைவியை உதவியாளரிடமே ஒப்படைக்க  தான் விரும்புவதாக வர்த்தகர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மனைவியும் உதவியாளரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

எந்தவித மோதல்களும் இன்றி, பேச்சுவார்த்தை மூலம் பொலிஸார் இந்த விவகாரத்தை தீர்த்து வைத்துள்ளனர். உதவியாளர் அந்த பெண்ணை அழைத்து செல்ல தயாராகிய நிலையில் வர்த்தகர் தன்னிடம் இருந்த கைப்பையிலிருந்து ஒரு பணக்கட்டை  வெளியே எடுத்து, "இதோ இதில் பத்து இலட்சம் ரூபாய் இருக்கிறது. இதை பெற்றுக்கொண்டு உனது புதிய மனைவியுடன் புதிய வாழ்க்கையை தொடங்கு" என கூறி பொலிஸாரையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் அந்த பணத்தை உதவியாளரிடம் ஒப்படைத்து விட்டு அவர் அங்கிருந்து சென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X