2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (24.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (24.06.2011)

இன்று கர வருடம் ஆனி மாதம் 09ஆம் நாள் (24.06.2011) வெள்ளிக்கிழமை. சித்த மேல் அமிர்தயோகமும் அஷ்டமி திதியும் உத்திரட்டாதி நட்சத்திரம் பிற்பகல் 12.43 மணிவரை, பின்பு ரேவதி.

இராகு காலம் : காலை 10.30 முதல் 12.00 மணிவரை.
எமகண்டம் : மாலை 3.00 முதல் 4.30 மணிவரை, இரவு 9.00 முதல் 10.30 மணிவரை.
நல்ல நேரம் : காலை 9.30 முதல் 10.30 மணிவரை, பகல் 4.30 முதல் 5.30 மணிவரை.



மேடம்
வியாபாரத்தில் புதிய திட்டங்களை மேம்படுத்தல், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுதல்.
அஸ்வினி: இன்பம்
பரணி: மேன்மை
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆர்வம்


இடபம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், வெளிப் பிரயாணங்கள் செல்வதனால் மனஆறுதல், பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: ஆதாயம்
ரோகிணி: மனஅமைதி
மிருகசீரிடம் 1, 2: நிம்மதி


மிதுனம்
மனதளவில் அலைச்சல்கள் ஏற்படும், ஒவ்வாத உணவினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், திறமையான சாதனைகளினால் உயர்வு ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: சிரமம்
திருவாதிரை: உபாதைகள்
புனர்பூசம்: புதிய வழி


கடகம்
வரவை விட அதிக செலவுகளை மேற்கொள்ளல், புதிய முயற்சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படும், தோல்வி மனப்பான்மை.
புனர்பூசம்: சஞ்சலம்
பூசம்: தடங்கல்
ஆயில்யம்: விரயம்


சிம்மம்
குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
மகம்: லாபம்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை


கன்னி 
பகைவர்களினால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும், பொருள் திருட்டுக்கள் ஏற்படும், வியாபார திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
உத்திரம் 2, 3, 4: இடையூறுகள்
அஸ்தம்: கஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவனம்


துலாம்
திறமையான சாதனைகளினால் வெற்றி கிடைக்கும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அனுகூலம்
சுவாதி: சலுகை
விசாகம் 1, 2, 3: நஷ்டம்


விருட்சிகம்
வரவுகள் குறைந்து செலவுகள் அதிகரிக்கும், மனதில் பயம் உணர்வு ஏற்படும், நவீன திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
விசாகம் 4: கலக்கம்
அனுசம்: செலவு
கேட்டை: சங்கடம்


தனுசு
குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், பொழுதுபோக்குகளில் ஈடுபாடு காட்டுதல், பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: அதிர்ஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அன்யோன்யம்


மகரம்
உண்ணும் உணவில் விருப்பமின்மை, சிலவிதமான பிரச்சினைகள் ஏற்படும், புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: துக்கம்
திருவோணம்: தோல்வி
அவிட்டம் 1, 2: வெறுப்பு


கும்பம்
பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு தேவை, மன சங்கடங்கள் ஏற்படும், புதிய வேலை திட்டங்களை மேற்கொள்ளலாம்.
அவிட்டம் 3, 4: முயற்சி
சதயம்: கவலை
பூரட்டாதி 1, 2, 3: ஊக்கம்


மீனம்
பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் சங்கடம், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல்.
பூரட்டாதி 4: சங்கடம்
உத்திரட்டாதி: கவனம்
ரேவதி: துக்கம்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .