Editorial / 2020 ஜூன் 02 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்குகள் சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர் களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
கடகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
சிம்மம்: கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக் கும். தோற்றப் பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம் புரியாத பயம் வந்துப் போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
துலாம்: எளிதில் முடிந்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
விருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புகழ்பெறும் நாள்.
6 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
06 Nov 2025