Editorial / 2020 ஜூன் 03 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்
ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். மதிப்பு கூடும் நாள்.
மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
கடகம்: திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள் .
சிம்மம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பெற்றிபெறும் நாள்.
கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவி செய்கிறேன் என்று சொல்லிகூட இருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுகொடுத்து போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத் திட வேண்டாம். சொந்த பந்தங்க ளுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.
தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர் கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். தாய் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.
மகரம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழி வார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். பழைய கடனில்ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.
கும்பம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். நேர்மறை சிந்தனை அதிகரிக்கும். உடல் நலம்சீராகும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
மீனம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
4 hours ago
7 hours ago
8 hours ago
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago
22 Nov 2025