Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 16 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சிலர் உங்களை வேண்டுமென்றே சீண்டி பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதரர்களை பகைத்து கொள்ள வேண்டாம்வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. ஆதாயம் தரும் நாள்.
மிதுனம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.
கடகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். சாதித்து காட்டும் நாள்.
சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். காரியங்கள் விரைந்து முடியும் நாள்.
கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் நீங்கள் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி இருக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். போராடி வெல்லும் நாள் .
துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.
விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. நல்லன நடக்கும் நாள் .
மகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கும்பம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போனவிஷயங்கள் உடனே முடியும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago