2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கட்டுமான தளத்தில் விபத்து ; வாகன உதவியாளர் பலி

Janu   / 2025 டிசெம்பர் 22 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை, 47வது வீதியில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்த பிரைம் மூவர் வாகனத்தின் சுமார் 500 கிலோ எடையுள்ள   சாய்வுப் பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார்  தெரிவித்தனர்.

களனி, ஈரியவெட்டிய, எண் 537 ஐச் சேர்ந்த 61 வயதான எஸ்.ஏ. சரத் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   

தனியார் நிறுவனத்தால் கட்டுமானத்தில் உள்ள மாடி கட்டிடத்திற்காக  கொண்டு வரப்பட்ட பைலிங் இயந்திரத்தை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல முயன்ற போது  திடீரென மூவர் வாகனத்தின் சாய்வுப் பகுதி சரிந்து வாகன உதவியாளர் மீது விழுந்துள்ளது.

இதில் படு காயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X