2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (17.06.2020) தொட்டது துலங்கும் நாள்!

Editorial   / 2020 ஜூன் 17 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். கை கால் வலி எடுக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: விடாப்பிடியாக செயல் பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கடகம்: அனுபவ பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சாதிக்கும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பாதியில் நின்ற வேலைகள் அனைத்தும் இனிதே முடியும். மகிழ்ச்சியான நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம், நட்பும் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்று மதத்தவர் உதவி கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மகரம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய வேலை முயற்சிகள் வெற்றியடையும். உயர்வு பெறும் நாள்.

கும்பம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மீனம்: இதுவரை இருந்த கோபம் டென்ஷன்  அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை செய்து லாபம் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--