2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (25.05.2020) வெற்றி கிடைக்கும் நாள்!

Editorial   / 2020 மே 25 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்களின் முயற்சி வெற்றியை பெற்று தரும். இன்று மனதைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்து காணப்படும்.

ரிஷபம் : வளர்ச்சி குறைவான நாள். லட்சியங்களை அடைவதற்கு இன்று குறைவான சாத்திய கூறுகள் இருக்ககும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

மிதுனம் : அமைதியாக இருந்தால் இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையும். அனுசரித்து நடந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.

கடகம் : அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். ஆன்மீக பாடல்களை கேட்பது மனஆறுதலை தரும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.

சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை தரும்.

கன்னி : குறைந்த முயற்சி மூலம் இலக்குகளை எளிதில் அடையலாம். நகைச்சுவை போக்குடன் இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றுவீர்கள்.

துலாம் : செயல்களில் வெற்றி பெற அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

விருச்சிகம் : இன்றைய நாள் சிரமமாக அமையும். பொறுமையுடனும் மனஉறுதியுடனும் இருக்க வேண்டியது அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

தனுசு : இறை பிரார்த்தனையும் தியானமும் உங்களுக்கு நல்ல வழியை காட்டும். இன்று மகிழ்ச்சி கிடைக்கும் நாள். இன்றைய நாள் உங்கள் கைகளில் உள்ளது.

மகரம் : இன்று உங்களிடம் மனதைரியம் அதிகமாக காணப்படும். வளர்ச்சியுள்ள நாள். உங்களின் மனவலிமை மூலம் வெற்றி கிடைக்கும்.

கும்பம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய நாள். வளர்ச்சியுள்ள நாள். வெற்றி கிடைக்கும் நாள்.

மீனம் : இன்று நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--