2021 மார்ச் 01, திங்கட்கிழமை

அஞ்சி வெளியிட்ட ட்ரம்ப் ஜூனியர்

Editorial   / 2017 ஜூலை 13 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கும் முன்னாள் ஊடகவியலாளருக்கும் இடையிலான மின்னஞ்சல் உரையாடல்களை, தனது டுவிட்டர் பக்கத்தில், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் வெளியிட்டமைக்கு, அது தொடர்பான செய்தி வெளியிடப்படுமென்ற அச்சமே காரணமாகும்.

அவரது இந்தச் சந்திப்புத் தொடர்பான செய்தியைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை, மின்னஞ்சலின் முழுமையான விவரங்களையும் பெற்ற பின்னர், ஊடக தர்மத்தின்படி, அது தொடர்பில் ஏதாவது கருத்துக் காணப்படுகிறதா என, ட்ரம்ப் ஜூனியரிடம் வினவியுள்ளது.

அவ்வாறு வினவி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றுச் சில நிமிடங்களில், அந்த உரையாடலை அவர், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஊடகம் மூலமாக வெளியாகுவதை விட, தான் நேரடியாக வெளியிடுவதே சிறந்தது என அவர் எண்ணியிருந்தார்.

இந்தத் தகவலை வெளியிடும் போது, “வெளிப்படையான தன்மையை ஊக்குவிப்பதற்காகவே இதை வெளியிடுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது, தவறான தகவலாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .