Shanmugan Murugavel / 2016 ஜூலை 20 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது அண்மைய ஏவுகணைச் சோதனைகளானவை, உயர் தலைவர் கிம் ஜொங்-உன்னால் தனிப்பட்ட ரீதியில் உத்தரவிட்டு கண்காணிக்கப்பட்டதாக இன்று புதன்கிழமை (20) தெரிவித்துள்ள வடகொரியா, தென்கொரியாவிலுள்ள ஐக்கிய அமெரிக்க தளங்கள் மீதான அணுவாயுதத் தாக்குதலுக்கான உருவகப்படுத்தலே இதுவெனவும் தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (19) ஏவப்பட்ட ஏவுகணைகள் மூன்றும், தென்கொரிய துறைமுகங்கள், ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் வன்பொருளைக் கொண்டிருக்கின்ற விமானத்தளங்கள் மீதான தாக்குதலுக்கான ஒத்திகை என வடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி முகவரகம் கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
குறித்த சோதனைகளின்போது, இலக்கு வைக்கப்படுகின்ற பிரதேசத்தை நோக்கிச் செல்கின்ற ஏவுகணைகளிலுள்ள அணுவாயுதங்களை வெடிக்கச் செய்யும் சாதனங்களின் செயற்பாட்டு பகுதிகள் சோதிக்கப்பட்டதாக கே.சி.என்.ஏ மேலும் தெரிவித்துள்ளது.
தனது கிழக்கு கரையிலுள்ள கடலை நோக்கி, 500 கிலோமீற்றர் தொடக்கம் 600 கிலோமீற்றர் வரை செல்லக் கூடிய மூன்று ஏவுகணைகளை வடகொரியா ஏவியதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இரண்டு ஏவுகணைகள் ஸ்கட் வகையானதென்றும் மற்றையது றொடொங் வகையானது என்றும் நம்பப்படுவதாக ஐக்கிய அமெரிக்க இராணுவம் தெரிவித்திருந்தது.
இதேவேளை, கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ-மூன், கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிப்பதை குறித்த சோதனைகள் கடுமையான தடைக்குள்ளாக்குவதாக தெரிவித்திருந்தார்.
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025