Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 24 , பி.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவின் றக்காவிலுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் நிலைக்கு அருகில், ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியால், நேற்று (24) காலையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களில், குறைந்தது 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில், பெண்ணொருவரும் அவரது ஐந்து பிள்ளைகளும் மூன்று தம்பதிகளும் உள்ளடங்குவதாக, கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.
றக்கா நகரத்துக்கு மேற்காக, ஏறத்தாழ 15 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிராமமான அல்-பருடாவை, ஐக்கிய அமெரிக்காவின் தலைமையிலான கூட்டணியின் தாக்குதல்கள் தாக்கியதாக, கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் றஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர், ஹொம்ஸ் மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என, றஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
றக்காவைக் கைப்பற்றுவதற்கான பாரியதொரு வலிந்த தாக்குதலொன்றுக்கான வான் வழி ஆதரவினை, ஐக்கிய அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி வழங்குகின்றது.
ஐக்கிய அமெரிக்காவினால் ஆதரவளிக்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகள், றக்காவிலிருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் நேற்று காணப்பட்டிருந்தன.
ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி, சிரியாவில் குண்டுத் தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், கடந்த ஒரு மாதத்திலேயே, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் குண்டுத் தாக்குதல்களினால், அதிகளவான பொதுமக்கள் உயிரிழந்ததாக கண்காணிப்பகம் தெரிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
6 minute ago
14 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
35 minute ago