Shanmugan Murugavel / 2016 ஜூலை 26 , மு.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவின் வடமேற்கிலுள்ள அலெப்போ மாகாணத்திலுள்ள நகரான அல்-அதாரெப் நகரத்தில், சிரிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில், 42க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் டசின் கணக்கானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் வன்முறைகள் தொடருகின்ற நிலையில், எதிரணி போராளிகளுக்கெதிராக, நாடெங்கிலும் உள்ள நிலைகள் மீது திங்கட்கிழமை (25) சிரிய இராணுவம், தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க செய்தி முகவரகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிரிய அரசாங்கம் மற்றும் ரஷ்யப் படைகளினால் மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்படும் விமானத் தாக்குதல்கள், 27 இரவில் இடம்பெற்றதாக உள்ளூர்வாசியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த வாரயிறுதியில் தாக்குதலுக்குள்ளான மருத்துவ நிலையங்கள் ஆறிலில், நான்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போவின் புறநகர்ப் பகுதி மீது, எதிரணி போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில், தாயொருவரும் அவரது பிள்ளையும் திங்கட்கிழமை (25) கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வ அரச ஊடகமான சனா தெரிவித்துள்ளது. தவிர, தலைநகரான டமஸ்கஸ்ஸை, கார்க் குண்டுத் தாக்குதலொன்று தாக்கியதாக தெரிவித்தபோதும், உயிரிழப்புக்கள் குறித்த தகவல்களை தெரிவித்திருக்கவில்லை.
17 minute ago
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
41 minute ago