2025 நவம்பர் 25, செவ்வாய்க்கிழமை

சிறுமி தவறான முடிவு

Freelancer   / 2025 நவம்பர் 25 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து நேற்று உயிர்மாய்த்துள்ளார்.

மூளாய் - ஆலடி பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கீர்த்திகா (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்றுக் காலை கழுத்தில் சுருக்கிட்டுள்ளார். இதை அவதானித்த தாயார் கயிற்றை அறுத்துள்ளார். பின்னர் அவசர அம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் வழங்கப்பட்டது.

அவ்விடத்துக்கு வந்த அம்புலன்ஸ், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துவிட்டு திரும்பிச் சென்றது.

சிறுமியின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X