2025 நவம்பர் 25, செவ்வாய்க்கிழமை

எரிமலை வெடிப்பால் விமான சேவை பாதிப்பு

Freelancer   / 2025 நவம்பர் 25 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் சுமார் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக ஹெய்லி குப்பி எரிமலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்தது.

இதனால், வானில் சுமார் 14 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பலும், மேகங்களில் புகையும் சூழ்ந்தது. இதன் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 800 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அபார் பகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை வெடித்தது. இதன் எரிமலை தொடர்ந்து பல மணி நேரமாக வெடித்து சிதறியது. இதைத்தொடர்ந்து சாம்பலும், மேகங்களை புகை மண்டலமும் சூழ்ந்தன. இந்த சாம்பல் சூழ் மேகங்கள் ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தான் பகுதியை சூழ்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த விவரங்களை எத்தியோப்பியா அரசு அதிகாரிகள் உறுதி செய்யாமல் உள்ளனர்.

எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் எத்தியோப்பியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு குறித்தும், அதனால் மேகங்களில் சாம்பல், மேகங்களில் புகை சூழ்ந்ததை உறுதி செய்துள்ளது.

இதனால் மத்திய கிழக்கு பாதையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை விமான நிறுவனங்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை டி.ஜி.சி.ஏ. மற்றும் இந்திய விமான நிலைய ஆணையமும் தெரிவித்துள்ளன. நிலைமை சீராகும் வரை விமான நிலையங்கள் கவனமுடன் விமான போக்குவரத்தை கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X