2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

அலெப்போவில் வழங்கற் பாதையை கைப்பற்ற எதிரணியினர் புதிய தாக்குதல்கள்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 12 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலெப்போவுக்கான மீதமிருந்த ஒரேயொரு விநியோகப் பாதையையும் அரசாங்கப் படைகள் துண்டித்ததையடுத்து, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாவட்டங்கள் மீது எதிரணி போராளிகள், கடுமையான தாக்குதலை தொடர்ந்துள்ளனர்.

இறுதி உயிர்நாடியாகவுள்ள,  முக்கியத்துவம் வாய்ந்த கஸ்டெல்லோ வீதியை மீளத் திறக்கும் பொருட்டு, எதிரணிக் குழுக்கள், கடந்த திங்கட்கிழமை (11) இரவு, வலிந்த தாக்குதலை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நகரில், சுரங்கமொன்றை எதிரணியினர் வெடிக்க வைத்ததில், அரசாங்கப் படைகள் 19 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கடுமையான தாக்குதல்கள் இடம்பெறுகின்ற போதும், மோதல் இடம்பெறும் இடங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கடுமையான குண்டுத் தாக்குதல்களினால், எதிரணியினரால் முன்னேற முடியாமல் இருப்பதாக கண்காணிபக்கத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போ பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் பொதுமக்கள் 13 பேர் திங்கட்கிழமை (11) கொல்லப்பட்டதாக கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தவிர, எதிரணியினரால் மேற்கு அலெப்போ நோக்கி ஏவப்பட்ட குறைந்தது 300 வரையான ஷெல்களினால், பொதுமக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .