2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

அல்-ஷபாப் போராளிகள் 34 பேர் பலி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 21 , மு.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலியாவில் இடம்பெற்ற மோதல்களில், தமது துருப்புக்களால், அல்-ஷபாப் ஆயுதக் குழுவின் போராளிகள் 34 பேர் கொல்லப்பட்டதாக கென்ய இராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்துள்ளது.

சோமாலியாவின் தெற்கு நகரமான அஃப்மடௌவில் கடந்த சனிக்கிழமை (19), இருபத்தொரு, போராளிகள் கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் கேணல் டேவிட் ஒபோநையோ தெரிவித்ததோடு, வீதியோரக் குண்டு வெடிப்பில் கென்ய படைவீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தவிர, தெற்கு சோமாலியாவிலுள்ள ரஸ் கம்போனிக்கு அருகில், கென்ய படைவீரர்களால் பதின்மூன்று போராளிகள் கொல்லப்பட்டதாகவும் ஒபோநையோ மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், கென்யப் படைவீரர்கள் பன்னிரண்டு பேர் அல்-ஷபாப்பால் கொல்லப்பட்டதாகவும், தாக்குதலின்போது இருவர் கைப்பற்றப்பட்டதாகவும் போராளிக் குழுக்களை கண்காணிக்கும் சைட் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X