2021 மார்ச் 01, திங்கட்கிழமை

அழுகுரல் கேட்டு படையினரால் காப்பாற்றப்பட்ட சிறுவர்கள்

Editorial   / 2017 ஜூலை 17 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கின் மொசூல் நகரில் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து தப்பித்த சிறுவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றன.

அந்நாட்டின் மேற்கு மொசூலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் விட்டுச் சென்ற பகுதிகளை படையினர் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன்போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஓர் இடத்திலிருந்து அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக விரைந்த படையினர் அழுதுகொண்டிருந்த சிறுமியொருவரை மீட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் பெற்றோர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மற்றுமொரு சிறுவனையும் ஈராக்கிய படையினர் மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.
கட்டிட சிதைவுகளுக்கு மத்தியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சிறுவர்கள் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .