Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நகரான குண்டூசின் மீது நூற்றுக்கணக்கான ஆயுததாரிகள் தாக்குதலை நடத்தி பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
திங்கட்கிழமை (28) அதிகாலையில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து நகரத்தின் பிரதான சதுக்கத்தில், தலிபான்கள் தமது கொடியை ஏற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆளுநர் மாளிகையிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் அரசாங்கப்படைகளும், தலிபான்களும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக, அங்கிருந்து நகரத்தின் விமானநிலையத்துக்குச் சென்ற நகர துணை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குண்டூஸ் நகரத்தின் பிரதான சிறைச்சாலைக்குள் நுழைந்த தலிபான்கள், நூற்றுக்கணக்கான தமது சக போராளிகளை விடுவித்துள்ளனர்.
தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட சிலர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 66 பேர் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்த எல்லைகளில்லாத வைத்தியர்கள் அமைப்பு, எட்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே இறந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தவிர, 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தலிபான் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நகரத்தில் உள்ள பல்கலைக்கழகமும் தலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக குண்டூஸ் நகரத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொயின் மரஸ்சிடியல் தெரிவித்துள்ளார். உள்ளூர் அரசாங்கத்தின் ஊழல் காரணமாக அதிருப்தியில் உள்ள குண்டூஸ்வாசிகள் தலிபான்களுக்கு ஆதரவளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
30 minute ago
34 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
34 minute ago
5 hours ago
6 hours ago