2021 மே 06, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானில் விளையாட்டுப் போட்டியொன்றின் மீது ஆயுததாரிகள் தாக்குதல்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்டிகா மாகாணத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்றில் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தவிர, மேற்படி தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்ததாக்குதலுக்கு இதுவரையில் எந்த இயக்கமும் உரிமை கோரவில்லை.

மோட்டார் சைக்கிள் ஒன்றிலேயே வெடிப்பொருட்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன் கரப்பந்தாட்ட மைதானத்தின் எல்லைப் பகுதியில் வைத்தே அது வெடிக்க வைக்கப்பட்டதாக  அம்மாகாண பொலிஸ் தலைமையதிகாரி சவார் ஷாகித் தெரிவித்திருந்தார்.

எனினும் தாக்குதல் நடந்த நேரம் மேற்படி மைதானத்தில் கரப்பந்தாட்டமோ, கிரிக்கெட்டோ, கால்பந்தாட்டமோ நடைபெற்றது என ஒன்றுக்கு பின் முரணாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தாம் இந்ததாக்குதலை நடத்தவில்லை என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதத்தில், இதே மாகாணத்தில் இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியொன்றின்போது இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதேவேளை இதே நாளில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவான 300 போராளிகள் நன்கர்கர் சோதனைச்சாவடிகளை தாக்கியுள்ளனர். பாதுகாப்பு படைகள் மீது ஒழுங்கமைத்து மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் இரண்டு பொலிஸார் கொல்லப்படிருந்தனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .