Editorial / 2020 ஜனவரி 21 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்களை அமுல்படுத்த ஈராக்கிய அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகரித்துள்ள நிலையில், மூன்று ஈராக்கிய நகரங்களில் ஐந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று கொல்லப்பட்டுள்ளனர்.
ஈராக் தலைநகர் பக்தாத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதுடன், வடகிழக்கு ஈராக்கிய நகரான பகுபாவில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், தென் ஈராக்கிய நகரான கர்பாலாவில் ஒருவர் கொல்லப்பட்டதாக மருத்துவ, பாதுகாப்புத் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
இறப்புகளை ஈராக்கிய அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கவில்லை.
சிதைந்து போயுள்ள ஈராக்கிய அரசாங்கமானது மெதுவாகவே சீர்திருத்தங்களை அமுல்படுத்துவது தொடர்பாக தங்களது கோபங்களை வெளிக்காட்டுவதற்காக பக்தாத்தின் வீதிகளை நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நிரப்பியிருந்த நிலையில், வீதிகளை வெறுமையாக்க பாதுகாப்புப் படைகள் முயன்ற நிலையிலேயே வன்முறை வெடித்திருந்தது.
புதிய தேர்தல் சட்டமொன்றின் கீழ் இடைக்காலத் தேர்தலொன்றை நடத்துவது, சுயாதீனப் பிரதமரொருவரை நியமிப்பது, மோசடி எனச் சந்தேகிக்கப்படும் அதிகாரிகளை விசாரணைக்குட்படுத்துவது உள்ளடங்கலாக தங்களது நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு நேற்று முன்தினம் வரையில் ஒரு வாரத்துக்கு முன்பாக அரசாங்கத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் காலக்கெடு விதித்திருந்தனர்.
இந்நிலையில், சீர்திருத்தங்களை நோக்கி மீண்டும் ஈராக்கிய அரசியல் உயர் மட்டங்களை பயணிக்குமாறும், ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக இருக்கவும் ஈராக்குக்கான ஐக்கிய நாடுகளின் இணைப்பாளர் ஜெனி ஹெனிஸ் பிளாஷயேர்ட் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எரியும் டயர்கள் மூலம் பக்தாத், தென் ஈராக்கில் நெடுஞ்சாலைகள், பாலங்களைக் கைப்பற்றுவதை நேற்று முன்தினம் ஆரம்பித்த இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றும் தொடர்ந்திருந்தனர்.
7 minute ago
43 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
43 minute ago
50 minute ago
53 minute ago