2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

இந்தியாவில் இன்று ரயில் தண்டவாளத்தில் வெடிப்பு:25 பயணிகள் பலி;110 பேர் காயம்

Super User   / 2010 மே 28 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இன்று அதிகாலை ரயில் தண்டவாளத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின்போது ரயிலில் பயணித்திருந்த 65 பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் 110 பேர் காயமடைந்துள்ளனர்.

மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபூர் மாவட்டத்திற்கு குறித்த ரயில் பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், தண்டவாளத்தில்  இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாவோயிஸ்ட்டுகள் தண்டவாளத்தைக் குண்டு வைத்துத் தகர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் காரணமாக 50 பேர் இதற்குள் சிக்கியுள்ள் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .