2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இந்தியாவில் பஸ் விபத்து:30 பொதுமக்கள் உயிரிழப்பு;20 பேர் காயம்

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இன்று அதிகாலை பஸ் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த விபத்து காரணமாக சுமார் 20 பேர் காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கிழக்கு இந்தியாவின் ஜார்க்கண்ட் எனும் பகுதியிலேயே, இந்த பஸ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ் திருமண வைபவத்தில் கலந்துகொள்ளுபவர்களை ஏற்றிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--