2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இந்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

Super User   / 2010 ஜூலை 06 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய தொலைக்காட்சியொன்று வெளியிட்டுள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் தனது வேலைப்பளுவை குறைக்கும் வகையிலான அமைச்சுப் பதவியை வழங்குமாறு நேற்று கோரியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கினால் விரைவில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பெரும்பாலும் ஜூலை 10-15 ஆம் திகதிகளுக்கிடையில் இம்மாற்றம் இடம்பெறலாம் எனவும் மேற்படி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தின்போது தி.மு.கவைச் சேர்ந்த ஏ.ராஜாவிடமிருந்து  தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பதவி நீக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வெளிவிவகார துணை அமைச்சர் பதவியிலிருந்து சஷி தரூர் இராஜினாமாச் செய்ததையடுத்து அவ்வெற்றிடம் நிரப்பப்படவில்லை. அதேவேளை, இரசாயனத்துறை அமைச்சர் எம்.கே. அழகிரி தமிழ்நாட்டு அரசியலில் முழுமூச்சாக ஈடுபடுவதற்காக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான பல காரணங்களால் இந்திய மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கருதப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--