2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தூதுக்குழுவினர் எதிர்வரும் 26இல் கனடாவுக்கு விஜயம்

Super User   / 2010 ஜூன் 14 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக் குழுவினர் எதிர்வரும் 26ஆம் திகதி கனடாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

ஜி- 20 மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாகவே  நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு மேற்படி உயர்மட்ட தூதுக் குழுவினர்  கனடா செல்லவுள்ளனர்.

மேற்படி உயர்மட்ட தூதுக் குழுவில்  இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரும் அடங்குகின்றனர்.

இந்த விஜயத்தின்போது, பொருளாதாரம், எரிசக்தி, கலாசார பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொட ர்பில் இரு நாடுகளுக்கிடையேயும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இது தவிர, அணுசக்தி ஒப்பந்ததமும் கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்கும் முகமாக, கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், எதிர்வரும் 27ஆம் திகதி  விருந்துபசாரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--