2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

இந்தோனேஷியாவில் இருவருக்கு மரண தண்டனை

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள ஆகக்குறைந்தது இருவருக்கு, இவ்வாண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுமென, சட்டமா அதிபர் இன்று தெரிவித்தார். இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்படுவோரில் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்களுக்கான மரண தண்டனை, துப்பாக்கிகளால் சுடப்பட்டு நிறைவேற்றப்படுமெனத் தெரிவித்த அவர், விரைவில் இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படுமெனவும் தெரிவித்தார். ஆனால் அவர்களின் குற்றம் என்ன போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

"தண்டனை நிறைவேற்றப்படவுள்ளோர், 2 பேரை விட அதிகமாகும். வெளிநாட்டவர்களும் உள்ளனர். (இதற்கெதிராக) போராட்டங்கள் நடக்கும், ஆனால் மரண தண்டனையை நாம் நிறைவேற்றுவோம்" என அவர் தெரிவித்தார்.

இந்தோனேஷியாவில் கடந்தாண்டு 14 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டைச் சேர்ந்த போதைமருந்துக் கடத்தற்காரர்களாவர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .