Menaka Mookandi / 2016 ஜூலை 22 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை, தாம்பரத்தில் இருந்து பயணமாகிய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று மாயமாகியுள்ளது. 29பேருடன் அந்தமான் புறப்பட்ட மேற்படி விமானம், நடுவானில் மாயமாகியுள்ளது.
இன்று காலை 7.30க்கு புறப்பட்ட விமானம், கடைசியாக 8.12 மணிக்கு ராடார் கருவியில் தெரிந்தது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வங்கக் கடலுக்கு மேலே சென்ற போதே விமானம் மாயமாகியுள்ளது. காணாமல் போன விமானப்படை விமானம் ஏ.என் - 32 வகையை சேர்ந்தது ஆகும்.
இந்த விமானம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது. விமானத்தை தேடும் பணி சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் நடைபெற்று வருகிறது.
49 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago