2021 மே 06, வியாழக்கிழமை

இனவழிப்புக் குற்றச்சாட்டு: மியான்மார் ஜனாதிபதிக்கெதிராக வழக்கு

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரில் றோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது இனவழிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்குக் காரணமாக மியான்மாரின் ஜனாதிபதி தெய்ன் செய்ன் காரணமாக இருந்துள்ளார் எனத் தெரிவித்து, அமெரிக்காவின் நியூ யோர்க்கில் வழக்குத் தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு வெளியே ஏற்படுத்தப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் அமெரிக்க ஏலியன் தீங்குச் சட்ட நீதிமன்றத்திலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெறுப்புக் குற்றங்கள் பிரதானமாக றோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாகவும் மிகவும் தீவிரவாதப் போக்குடைய பௌத்த மதகுருக்களாலும் தெய்ன் செய்னின் அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நிலையில் காணப்படக்கூடிய பாகுபாட்டுக்கும் அவர் உள்ளாகியுள்ளதாகவும் இந்த வழக்குக் குற்றஞ்சாட்டுகிறது.

அத்தோடு, ஜனாதிபதி செய்ன், வெளிநாட்டமைச்சர் வுன்ன மாயுவ் லுவின் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்க வேண்டுமென, இவ்வழக்குக் கோருகின்றது.

இந்த வழக்கை நிராகரித்துள்ள மியான்மார் ஜனாதிபதியின் பேச்சாளரொருவர், மியான்மார், அமெரிக்காவின் வேலையாளர் கிடையாது எனவும் அமெரிக்காவிலுள்ள வழக்கொன்றைச் சந்திக்க வேண்டிய தேவை தமக்குக் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .