2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இஸ்தான்புல்லில் தாக்குதல்: 38 பேர் கொல்லப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள கால்பந்தாட்ட அரங்கமொன்றுக்கு வெளியே, ஒரு நிமிட இடை வேளைக்குள் இரண்டு குண்டுகள் நேற்றிரவு (10) வெடித்ததில், 38 பேர் கொல்லப்பட்டதுடன் 166 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியின் முன்னணி அணிகள் இரண்டு மோதிய போட்டியொன்றைத் தொடர்ந்தே, பொலிஸார் மீதான ஒருங்கிணைக்கப்பட்ட மேற்படித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்தான்புல்லின் பெஸ்கிட்டாஸ் கால்பந்தாட்ட அணியினது வொடாபோன் அரங்கத்துக்கு வெளியேயே, முதலாவதாக கார்க் குண்டொன்று வெடித்துள்ளது. இதனையடுத்து, குறித்த காரானது வீதியில் எரிந்து கொண்டுள்ளது. அதன்பின்னர், 45 செக்கன்களுக்குப் பின்னர், அருகிலுள்ள பூங்காவொன்றில், பொலிஸாரினால் சூழப்பட்டிருந்த வெடிபொருட்களை அணிந்திருந்த சந்தேகநபரொருவர், தன்னை வெடிக்க வைத்துள்ளார்.

கலகமடக்கும் பொலிஸ் அதிகாரிகள் கூடுமிடத்திலேயே முதலாவது வெடிப்பு நிகழ்ந்ததாக, உள்நாட்டு அமைச்சர் சுலெய்மான் சொய்லு தெரிவித்துள்ளார். வெடிப்புகளில் கொல்லப்பட்டவர்களில், ஏழு பேர் பொதுமக்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஏனைய 30 பேரும் பொலிஸ் அதிகாரிகள் என்பதோடு, அதில், பொலிஸ் தலைவரொருவரும், சிரேஷ்ட அதிகாரியொருவரும் உள்ளடங்குவதாக சொய்லு தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--