Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்தகிரி காலனி பகுதியில், மது போதைக்கு அடிமையான ஓட்டுனர் சுரேஷை அவரது மனைவி மௌனிகா, காதலன் அஜய் மற்றும் நண்பர் சிவகிருஷ்ணாவுடன் சேர்ந்து திட்டமிட்டு கொன்ற சம்பவம், பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் நெஞ்சு வலியால் இறந்ததாக நாடகம் அடித்து விளையாடிய மௌனிகா, உண்மையில் அவரை தூக்க மருந்து கலந்த மதுவால் மயக்கி, சேலையால் கழுத்தை நெரித்து கொன்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்த கடந்த வாரம், சப்தகிரி காலனியில் உள்ள சுரேஷ்-மௌனிகா தம்பதியின் வீட்டில் நடந்தது. இரவு நேரத்தில், இளம்பெண் மௌனிகா திடீரென உரத்த கதறல் சத்தம் எழுப்பினார்.
அக்கம்-பக்கம் வசிப்பவர்கள் அந்த சத்தத்தை கேட்டு பதற்றத்தில் ஓடி வந்து பார்த்தனர். "என் கணவர் சுரேஷுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு!" என்று அழுதுகொண்டே சொன்ன மௌனிகா, அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அண்டைவீட்டுக்காரர்கள்.அங்கு சிகிச்சை பெற்ற சுரேஷ் உயிரிழந்ததாக டாக்டர் அறிவித்தார். இந்த செய்தியை கேட்டு பதறிய சுரேஷின் பெற்றோர், மகன் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.
அடுத்தடுத்த நாட்களில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. சுரேஷின் பெற்றோர், மகன் இறந்த சோகத்தில் மௌனிகாவின் வீட்டிலேயே தங்கியிருந்தனர். ஆனால், அந்த சோகத்தில் மௌனிகா மட்டும் மூழ்கவில்லை என்பது தான் அதிர்ச்சி!
"மௌனிகாதான் நம் மகனுக்கு ஏதோ செய்திருக்கிறாள்" என்று நினைத்து, அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.பொலிஸார் அதிகாரிகள் மௌனிகாவை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் முன்னும் பின்னும் முரண்படும் பதில்களை அளித்த மௌனிகா, கடும் விசாரணையில் உண்மைகளை ஒப்புக்கொள்ள வேண்டியதாகியது.
ஆனால், நாட்கள் போக போக மது போதைக்கு அடிமையானார். வீட்டுக்கு எப்போதும் முழு போதையில் திரும்பி, சம்பாதித்த பணத்தை மனைவிக்கு கொடுக்காமல், அவர்களை தாக்கி சித்திரவதை செய்தார்.இந்த வன்முறையால் மன உளைச்சலுக்கு ஆளான மௌனிகா, குழந்தைகளின் படிப்பு செலவுக்காகவும், பணத்துக்காகவும் பாலியல் தொழிலில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் அஜயுடன் அவருக்கு தகாத உறவு உருவானது.
சுரேஷ் வேலைக்கு சென்ற பிறகு, அஜயை தினசரி வீட்டுக்கு அழைத்து தனிமையில் இருந்தார் மௌனிகா. மது போதையில் ஊதாரியாக இருந்த சுரேஷ், மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி சண்டை போட்டார்.
சமைக்கப்பட்ட உணவில் அதிக அளவு வயக்ரா (15 மாத்திரைகள்) மற்றும் இரத்த அழுத்த மாத்திரைகள் (15) கலந்து கொடுத்து, "ஹார்ட் அட்டாக் வந்து இறந்தார்" என்று சொந்தக் குடும்பத்தாரிடம் பொய் சொல்லலாம் எனத் திட்டமிட்டனர்.ஆனால், சமைக்கப்பட்ட உணவில் ஒரு விசித்திர வாசனை வந்ததால், சுரேஷ் அதை சாப்பிட மறுத்தார்.
தோல்வியடைந்த முதல் திட்டத்திற்கு மாற்றாக, அடுத்த நாள் சுரேஷ் வீட்டில் உட்கார்ந்து மது அருந்தியபோது, அவருக்கே தெரியாமல் அதில் அதிக அளவு தூக்க மருந்து கலந்தார் மௌனிகா. முழுமையாக மது அருந்திய சுரேஷ், தனது அறைக்கு தூங்கச் சென்றார்.அப்போது, அறைக்குள் நுழைந்த மௌனிகா, சேலையால் சுரேஷின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றார். பின்னர், "ஹார்ட் அட்டாக் வந்து உயிரிழந்தார்" என்று அலறி அழுது நாடகம் அரங்கேற்படுத்தினார்.
"இது ஒரு திட்டமிட்ட கொலை. குடும்ப வன்முறை, போதை, தகாத உறவுகள் போன்ற சமூக பிரச்சினைகள் இதன் பின்னணியில் உள்ளன" என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சுரேஷின் பெற்றோர், "நம் மகன் போதைக்கு அடிமையானதால் இப்படி நடந்தது.
ஆனால், மௌனிகாவின் செயல் மன்னிக்க முடியாதது" என்று கூறினர். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பொலிஸ் ஏற்பாடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.இந்தச் சம்பவம், குடும்ப வன்முறை மற்றும் போதை பிரச்சினைகளுக்கு எச்சரிக்கை அளிக்கிறது. பொலிஸார் மேலும் விவரங்களை வெளியிட உள்ளனர்.
15 minute ago
42 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
42 minute ago
55 minute ago