2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இஸ்ரேலில் கத்திக்குத்தில் அமெரிக்கர் பலி, 12 பேர் காயம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 09 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க உப ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலின் தெல் அவிவ் நகரத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவமொன்றில், அமெரிக்கரொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

பலஸ்தீன இளைஞரொருவனே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. மேற்குக் கரையிலுள்ள குவாகிலியா என்ற நகரத்திலிருந்து வந்த குறித்த இளைஞன், தாக்குதலைத் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் சுற்றுலா வலயமான ஜாபா துறைமுகப் பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தொடர் தாக்குதலாகவே இது அமைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் இடம்பெற்று சில கிலோ மீற்றர் தூரத்திலேயே, உப ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .