2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

’ஈரானில் 52 நிலைகளை ஐ. அமெரிக்கா இலக்கு வைக்கிறது’

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க நபர்களையோ அல்லது சொத்துக்களையோ ஈரான் தாக்குமானால், ஈரானில் 52 நிலைகளை ஐக்கிய அமெரிக்கா இலக்கு வைக்கிறதெனவும், அவற்றை மிகவும் வேகமாகவும், மிகவும் கடினமானதாகவும் தாக்கும் எனவும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று  எச்சரித்துள்ளார்.

ஈரானின் இரண்டாம் நிலைத் தலைவராகக் கருதப்படுகின்ற ஈரானிய புரட்சிகர காவலர்களின் வெளிநாட்டுப் பிரிவிவான குவாட்ஸ் படையின் தளபதியான குவாசிம் சொலெய்மானியை ஐக்கிய அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பக்தாத்தில் கொன்றதை நியாயப்படுத்தியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 52 என்ற இலக்கமானது, ஈரானியத் தலைநகர் தெஹ்ரானிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தில், 1979ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ஓராண்டுக்கு மேலாக பணயக்கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐக்கிய அமெரிக்கர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், சில நிலைகள் மிகவும் உயர் மட்டமானவை, ஈரானுக்கு முக்கியமானவை, ஈரானிய கலாசாரத்துக்கு முக்கியமானவை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த இலக்குகளும் ஈரானும் மிகவும் விரைவாக, மிகவும் கடுமையாகவும் தாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஈராக் முழுவதுமுள்ள ஐக்கிய அமெரிக்க நிலையங்கள் மீது ஏவுகணைகள், ஈராக்கியப் படைகளுக்கான எச்சரிக்கைகள் மூலம் அழுத்தங்களை ஈரானுக்கு ஆதரவான பிரிவுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .