2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

ஈரான் நாடாளுமன்றத்தில் தாக்குதல் ; 7 பேர் பலி

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலும் ஈரானின் புரட்சிகரத் தலைவர் றுஹோல்லா கோமெய்னியின் ஸியாரத்திலும் (நினைவிடம்) மேற்கொள்ளப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களின் விளைவாக, குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள், 3 ஆயுததாரிகள் உள்நுழைய முயன்றனர். அதன்போது, அத்தொகுதியின் பாதுகாப்புப் பணிக்காகக் காணப்பட்ட அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.

ஸியாரத்தில், தற்கொலைக் குண்டுதாரியொருவர், தன்னைத்தானே வெடிக்க வைத்தார். அதேபோல், இன்னுமொருவர், ஆறு கைக்குண்டுகளுடன், அப்பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

இந்தத் தாக்குதலே, தாமே மேற்கொண்டதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, உரிமை கோரியுள்ளது. சிரியாவிலும் ஈராக்கிலும், அக்குழுவுக்கெதிரான போரில், முக்கிய பங்காளராக, ஈரான் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .