2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

ஈராக்கில் பாதியை இழந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்

Shanmugan Murugavel   / 2016 மே 17 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கிலும் சிரியாவிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு தனது கட்டுப்பாட்டிலிருந்த இடங்களைத் தொடர்ந்தும் இழந்துவருவதாக, ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களப் (பென்டகன்) பேச்சாளர் பீற்றர் குக் தெரிவித்துள்ளார். இதில், ஈராக்கில் அக்குழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதியில், ஏறத்தாழ பாதியளவை இழந்தமையும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

பென்டகனின் முன்னைய அனுமானத்தின்படி, ஈராக்கில் அக்குழு கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் 40 சதவீதத்தையும் சிரியாவில் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததில் 10 சதவீதத்தையும் இழந்துள்ளதாகக் கணிக்கப்பட்டது.

ஆனால், திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்தின்படி, ஈராக்கில் 45 சதவீதமான நிலப்பகுதியையும் சிரியாவில் 16 தொடக்கம் 20 சதவீதமான நிலப்பகுதியையும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, தனது கட்டுப்பாட்டிலிருந்து இழந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

அக்குழு ஈராக்கில், றமாடி, ஹீற் ஆகிய இடங்களை இழந்துள்ளதாலும், மொசூல், பாலுஜா உட்பட முக்கியமான நகரங்களை இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .