Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜனவரி 12 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைகர் இராணுவத் தளத்தின் மீது இஸ்லாமிய ஆயுததாரிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கடந்த வியாழக்கிழமை நடாத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தது 89ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்புத் தகவல் மூலங்கள் நான்கு தெரிவித்துள்ளன.
மேற்கு நகரான சினகொட்ராரில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனங்களில் வந்த தாக்குதலாளிகளின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்கையில் 25 படைவீரர்கள் கொல்லப்பட்டதாக கடந்த வியாழக்கிழமை நைகர் அரசாங்கம் கூறியிருந்தன.
இந்நிலையில், தாக்குதலில் கொல்லப்பட்ட நைகர் பாதுகாப்புப் படைகளின் குறைந்தது 89 உறுப்பினர்கள், நைகர் தலைநகர் நியாமேயில் நேற்று புதைக்கப்பட்டதாக பாதுகாப்புத் தகவல் மூலங்கள் நான்கு தெரிவித்துள்ளன.
இதேவேளை, சினகொட்ராரில் உடனடியாக குறிப்பிட்ட எண்ணிக்கையான படைவீரர்கள் புதைக்கப்பட்ட நிலையில், உண்மையான உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தகவல் மூலமொன்று கூறியுள்ளது.
இந்நிலையில், தாக்குதலாளிகளை பிரெஞ்சுத் தாக்குதல் ஜெட்கள் கடந்த வியாழக்கிழமை பயப்படுத்தியதாக பிரான்ஸ் பிராந்தியப் படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இத்தாக்குதலுக்கு இதுவரையில் எக்குழுவும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
23 minute ago
59 minute ago