2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

உலகின் சிறந்த நகரமாக "புதுடில்லி"

Super User   / 2010 ஜூன் 30 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

"லீகான் யூ வேர்ல்ட் சிட்டி" நிறுவனம் உலகில் மிகச் சிறந்த நகரங்களை தேர்வு செய்து வருகிறது. இதற்காக ஒரு போட்டியினை அறிவித்தது. இந்தப் போட்டியில் 32 நாடுகளின் 72 நகரங்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.

இதில் உலகின் சிறந்த நகரமாக புதுடில்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் சிறந்த நகரமாக புதுடில்லி தேர்ந்தெடிக்கப்பட்டதற்கு "லீகான் யூ வேர்ல்ட் சிட்டி" நிறுவனம் சில காரணங்களைக் கூறியுள்ளது.

அதன்படி, கட்டமைப்பு வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார வசதி போன்றவற்றின் மேம்பாடுதான் புதுடில்லிக்கு இந்தப் பெருமையை பெற்றுத் தந்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும், இந்தப் பெருமைக்கு  காரணமாக இருந்த புதுடில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தையும் அந்நிறுவனம் பாராட்டியுள்ளது.
 
தற்போது புதுடில்லியின் மக்கள் தொகை 1 கோடியே 63 இலட்சமாக உயர்ந்துள்ளது. ஆண்டு தோறும் 5 இலட்சம் மக்கள் புதிதாக இங்கு குடிபெயர்கின்றனர். மேலும், யமுனை ஆற்றை சுத்தம் செய்யவும், சுகாதார மேம்பாட்டுக்காகவும் ரூ.32 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .