2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

“கோவை பாலியல்: சட்டத்தை கடுமையாக்க வேண்டும்”

Editorial   / 2025 நவம்பர் 06 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடிகைகள் அஞ்சுகுரியன், கவுரிகிஷன் ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நடிகை கவுரிகிஷன் கூறும் போது, ‘பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை காலம் காலமாக பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். எப்போதுதான் முடிவு மற்றும் தீர்வு வரும் என தெரியவில்லை. குற்றவாளிகளுக்கு என்கவுண்டர்தான் தீர்வு என்று சொல்கிறார்கள். நானும் ஜார்னலிசம் படித்து உள்ளேன். ஆனால் அதற்கும் சட்ட திட்டங்கள் உள்ளது. இது போன்ற சம்பவங்களுக்கு சோசியல் மீடியா மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’

நடிகை அஞ்சு குரியன் கூறுகையில், ‘சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும். அப்போது தான் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு பயம் இருக்கும். பயம் இல்லை என்றால் குற்றங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். வளைகுடா நாடுகளில் பெண்கள் இரவில் வெளியில் எப்போதும் சுதந்திரமாக நடக்கலாம். அங்கு யாரும் ஏதும் பண்ண மாட்டார்கள். அதுபோல் இங்கும் சட்டம் கடுமையானால் பெண்களுக்கு பாதுகாப்பும் சுதந்திரமும் இன்னும் அதிகமாக கிடைக்கும்’ என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X