2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர் இருவர் மலேஷியாவில் கைது

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 14 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியப் பிரதமர் நஜீப் ரஸாக்கை வினவ முயன்ற அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரும் கமெரா கலைஞர் ஒருவரும் குறிப்பிட்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நஜீப்பினால் மறுக்கப்படும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரிடம் வினவுவதற்கு குஷிங் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை (12) அவரை அணுக லின்டொன் பெஸ்ஸேரும் லௌய்யி எரோகுலுமும் முயன்றிருந்தனர்.

அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புலானாய்வு நிகழ்ச்சியான போர் கோணர்ஸைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்ட போதும் இவர்கள் மலேஷியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய மிகுந்த கவலை கொள்வதாகத் தெரிவித்த அந்நாட்டின் வெளிவகார அமைச்சர் ஜூலி பிஷொப், ஊடக சுதந்திரம் பற்றிய தனது கவானயீர்ப்பையும் வெளிப்படுத்தினார்.

வண் மலேஷியா அபிவிருத்தி பேர்கட்  அரசாங்க முதலீட்டு பணத்தின் 681 மில்லியன் அமெரிக்க டொலரானது நஜீப்பின் தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்டுளமையே சர்ச்சைக்குரியதாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--