2021 மார்ச் 03, புதன்கிழமை

ஊடகவியலாளர்கள் இருவர் நேரலையில் கொலை

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் டபிள்யூ.டி.பி.ஜே.7 தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள், வேர்ஜினியா மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேரடி ஒளிபரப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அலிசன் பார்க்கர் என்ற செய்தியாளரும் அடம் வார்ட் என்ற கமெரா ஊழியருமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது நேரடியாக பேட்டி காணப்பட்டுக் கொண்டிருந்த பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

கொலையாளி யாரென்பது குறித்தோ அல்லது நோக்கமோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .