Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 31 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையொன்றால் நடாத்தப்படும் தாக்குதல் போன்ற மாதிரித் தாக்குதலின் பங்கேற்புடன் இடம்பெற்ற, ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் முதலாவது ஏவுகணைத் தடுப்புச் சோதனை, நேற்று (30), வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
மார்ஷல் தீவுகளிலுள்ள குவாஜிலின் பவழத்தீவிலிருந்து ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையான ஏவுகணையொன்றை, அலாஸ்காவுக்கு சற்றுத் தெற்காகவுள்ள நீர்ப்பரப்பை நோக்கி, ஐக்கிய அமெரிக்க இராணுவம் ஏவியது. பின்னர், கலிபோர்னியாவிலுள்ள வன்டென்பேர்க் விமானப்படைத் தளத்திலிருந்து, இடைமறிப்பதற்காக, ஏவுகணையொன்றை, ஐக்கிய அமெரிக்க இராணுவம் ஏவியிருந்தது.
மேற்படி நடவடிக்கை, சன்னமொன்றை, இன்னுமொரு சன்னத்தால் தாக்குவது போன்றதாகும் என்றபோதும், பாரியளவு தூரங்களின் பங்களிப்புடன் நடைபெறுவதால், இது சிக்கலாக அமைகிறது.
போயிங் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும், தரையைத் தளமாகக் கொண்ட இடைநடுவிலான பாதுகாப்புக்கான, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையையொத்த ஏவுகணைக்கெதிரான, முதலாவது நேரடி ஒத்திகை இதுவெனத் தெரிவித்துள்ள ஏவுகணைப் பாதுகாப்பு முகவரகம், இது நம்பமுடியாத செயல் எனப் பாராட்டியுள்ளது.
இந்நிலையில், “எமது தாயகத்தைப் பாதுகாப்பதற்கு, இந்த அமைப்பு முக்கியமானது. மிகவும் உண்மையான ஆபத்தொன்றுக்கெதிராக, முடியுமான, உண்மையான தடுத்து நிறுத்தத்தைக் கொண்டிருக்கிறோம் என்று இச்சோதனை வெளிப்படுத்துகிறது” என, ஏவுகணைப் பாதுகாப்பு முகவகரகத்தின் பணிப்பாளர் வைஸ் அட்மிரல் ஜிம் ஸ்ரிங், அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், வடகொரியாவிலிருந்தான ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஏவுகணைத் தடுப்புத் திட்டத்தில், மேற்படி சோதனை, பாரியதொரு மைற்கல்லாக நோக்கப்படுகிறது.
இந்நிலையில், “இருக்கக்கூடிய ஆபத்துக்களுக்கெதிராக, நாங்கள் பயன்படுத்தக்கூடிய பரந்தளவிலான ஏவுகணைப் பாதுகாப்பு மூலோபாயத்தில் ஓர் அங்கம் இது” என பென்டகன் பேச்சாளர் கப்டன் ஜெப் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட ஏவுதலுக்கு முன்னர், 1999ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற 17 சோதனைகளில் ஒன்பதையே, தரையைத் தளமாகக் கொண்ட இடைநடுவிலான பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாகத் தாக்கியிருந்ததுடன், இறுதியாக, 2014ஆம் ஆண்டே வெற்றிகரமாகத் தாக்கியிருந்தது.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago