Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 14 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரேசா மே, அந்நாட்டின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தட்சருக்குப் பின்னர் பதவியேற்ற முதலாவது பெண்மணி என்ற ரீதியில், அவருடனான ஒப்பீடுகள் அதிகளவில் காணப்படுகின்ற போதிலும், அவரை விட, தற்போது ஆட்சியிலிருக்கும் ஒரு தலைவருடன், தெரேசா மே, அதிக ஒப்பீடுகளைக் கொண்டிருக்கிறார். ஜேர்மனியின் சான்செலரான அங்கெலே மேர்க்கெல் தான் அவர்.
இருவருமே நடைமுறைவாதிகள், பாதிரியார்களின் மகள்கள், இருவருக்கும் குழந்தைகள் இல்லை, உறுதியான முடிவெடுப்பவர்கள், அவர்களோடு பணியாற்றிய ஆண் அரசியல்வாதிகளால் நீண்டகாலமாகக் கணக்கிலெடுக்கப்படாதவர்கள் என, இருவருடைய ஒற்றுமையும் நீண்டு செல்கின்றன.
இருவருமே, நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பார்களெனப் பெரிதாக எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், அவர்களது வளர்ச்சியைப் பார்க்கும் அரசியல் அவதானிகள், இதற்கு அவர்கள் பொருத்தமானவர்கள் என்றே தெரிவிக்கிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்கதாக, 2012ஆம் ஆண்டு, பத்திரிகையொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கிய மே, தானும் மேர்க்கெலும் மலையேறுவதற்கும் சமைப்பதற்கும் விரும்புவதைச் சுட்டிக்காட்டியதோடு, மேர்க்கெலின் "அசட்டையில்லாத திறமை"யை, அவர் பாராட்டியிருந்தார்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பேரம்பேசல்களை ஐக்கிய இராச்சியம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இருவரது இந்தப் பண்புகள், ஐக்கிய இராச்சியத்துக்குப் பிரச்சினையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. விட்டுக்கொடுத்த இருவரும், எவ்வாறு பொதுவான நிலைப்பாடொன்றை அடைவர் என்பதே, இப்போதுள்ள எதிர்பார்ப்பாக உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago