2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

ஐ.அமெரிக்காவை விமர்சிக்கிறது வடகொரிய அரச பத்திரிகை

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, வடகொரியாவுக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை, அந்நாடு இரத்துச் செய்துள்ள நிலையில், அது தொடர்பான கடுமையான விமர்சனங்களை, வடகொரிய அரச பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இரட்டைப் போக்குடன், ஐ.அமெரிக்கா நடந்துகொள்கிறது எனவும், வடகொரியாவுக்கு எதிராக, “குற்றவியல் சதித் திட்டமொன்றை” அந்நாடு தீட்டுகிறது எனவும், அப்பத்திரிகை குற்றஞ்சாட்டியது.

ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும், இவ்வாண்டு ஜூனில், சிங்கப்பூரில் வைத்துச் சந்தித்த பின்னர், இரு நாடுகளுக்குமிடையிலான பேரம்பேசல்களில், பெருமளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், வடகொரியாவின் அணுவாயுதமழிப்புத் தொடர்பில் போதியளவு முன்னேற்றங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவித்து, பொம்பயோவின் விஜயத்தை, ஜனாதிபதி ட்ரம்ப், இரத்துச் செய்திருந்தார்.

இந்நிலையிலேயே, வடகொரியாவுக்கெதிரான போரொன்றை முன்னெடுப்பதற்கு, ஐ.அமெரிக்கா முயல்கிறது எனவும், இதுபற்றி ஆழமான கவனத்தைச் செலுத்துவதாகவும், அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .