2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஐ. அமெரிக்க, பிரித்தானியப் படைகள் கொல்லப்பட்டன

Editorial   / 2020 மார்ச் 12 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டுப் படைகளைக் கொண்டிருக்கும் ஈராக்கிய இராணுவத் தளமொன்றின் மீதான றொக்கெட் தாக்குதலில், ஐக்கிய அமெரிக்கப் படைவீரர்கள் இருவரும், பிரித்தானியப் படைவீரரொருவரும் நேற்றுக் கொல்லப்பட்டதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈராக்கின் அயல்நாடான சிரியாவில் ஈரானுடன் இணைந்த ஹஷெட் அல்-ஷாபி ஈராக்கியப் போராளிகளை ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி விமானத் தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் தாக்குதல்கள் இலக்கு வைத்ததாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குறைந்தது 18 போராளிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்லாமிய ஆயுததாரிகளுடன் போராடும் உள்ளூர்ப் படைகளுக்கு உதவும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் படைகளைக் கொண்டிருந்த ஈராக் தலைநகர் பக்தாத்துக்கு வடக்காகவுள்ள தஜி விமானத் தளத்தையே 18 கட்யுஷா றொக்கெட்டுகள் நேற்று மாலையில் தாக்கியிருந்தன.

தமது மூன்று படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமடைந்தாக கூட்டணியின் அறிக்கையொன்று தெரிவித்தபோதும் அவர்கள் எந்நாட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

ட்ரக்கொன்றின் பின்பகுதியிலிருந்து றொக்கெட்டுகள் ஏவப்பட்டதாகத் தெரிவித்த ஈராக்கிய இராணுவம், பாதிப்புகள் குறித்து கருத்தெதனையும் தெரிவித்திருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X