Freelancer / 2025 டிசெம்பர் 23 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகேகொடை - கொஹூவல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
நேற்று இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 25 வயதுடைய ஒருவர் காயமடைந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு நகரம் முழுவதும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து முச்சக்கரவண்டியில் தப்பிச் சென்றதாக நம்பப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க நோக்கி சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்தப் பகுதிகள் வழியாகச் செல்லும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். R
13 minute ago
19 minute ago
48 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
48 minute ago
50 minute ago