Shanmugan Murugavel / 2016 மார்ச் 15 , மு.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈராக்கின் முக்கிய நகரமான றமாடிக்கு அருகில், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஆல் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களில் குறைந்தது 47 ஈராக் படைவீரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதலாவது தாக்குதலானது ஸன்குரா நகரத்துக்கு அருகிலுள்ள குவாட்டைனியாஹ், ஸூவையாஹ் ஆகிய கிராமங்களிலுள்ள அதேவேக தரையிறக்கப் படையணி மூன்றாவது பிரிவின் தலைமையகத்தின் மீதும் ஏனைய இராணுவக் குடியிருப்புகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், குறைந்தது 22 படைவீரர்கள் கொல்லப்பட்டதோடு, பிறிதொரு 16 பாதுகாப்புப் படையினர் காயமடைந்திருந்தனர்.
இதேவேளை, றமாடிக்கு முற்பது கிலோமீற்றர் வடகிழக்காகவுள்ள சஃபியரஹ், அபு டைபன் ஆகிய கிராமங்களில் சென்று கொண்டிருந்த ஈராக்கிய பாதுகாப்பு படைகளின் தொடரணிகளை, ஐ.எஸ்.ஐ.எஸ் கார்த் தற்கொலை குண்டுதாரிகள் தாக்கிய இரண்டு வேறு சம்பவங்களில், குறைந்தது 25 படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன் பிறிதொரு 20 பேர் காயமடைந்துள்ளனர்.
53 minute ago
57 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
57 minute ago
1 hours ago
4 hours ago