Freelancer / 2025 நவம்பர் 19 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இது சிங்கள பௌத்த நாடு. ஏனைய மதங்களை ஆதரிப்பது சிங்கள பௌத்த கொள்கை .திருகோணமலை விவகாரம் பற்றி பேசினால் தமிழ் அரசியல்வாதிகள் எம்முடன் முரண்பாடுவார்கள். ஏனெனில் இந்த விடயம் தற்போது இனவாதமாக மாற்றப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம் பெற் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
திருகோணமலை கரையோர வீதியில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டார்கள். பிக்குகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.இரண்டு பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிலையை பாதுகாப்பதற்காகவே அவ்விடத்தில் இருந்து கொண்டு சென்றதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார் இது சிங்கள பௌத்த நாடு. ஏனைய மதங்களை ஆதரிப்பது தான் பௌத்த கொள்கை .
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தற்போது இனவாதமாக மாற்றப்பட்டுள்ளது.இந்த விடயத்தை பற்றி நாங்கள் பேசினால் தமிழ் அரசியல்வாதிகள் எம்முடன் முரண்படுவார்கள்.அரசாங்கம் நினைத்திருந்தால் இந்த பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வினை கண்டிருக்கலாம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .