Freelancer / 2025 நவம்பர் 19 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதளுடன் தொடர்புபட்டவர்களுக்கு சட்டம் நிலைநாட்டப்படாவிட்டால் கடவுளின் சாபம் கிடைக்கும்.எனவே மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துங்கள் என புதிய ஜனநாயக முன்னணி எம்.பி. ரோஹி அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்து, சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்திருந்தது. அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து ஒருவருடம் கடந்துள்ளது. அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி எங்கே ?தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பான தகவல்கள் இருப்பதாக தெரிவித்தீர்கள். ஏன் இன்னும் சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியவில்லை ?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எதிர்பார்த்திருக்கிறார்.நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம். யார் எப்படி இதனை திட்டமிட்டு மேற்கொண்டிருந்தாலும், அது தேசிய குற்றம்.இந்த குற்றத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு சட்டம் நிலைநாட்டப்படாவிட்டால் கடவுளின் சாபம் கிடைக்கும்.
அரசாங்கம் தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளித்த பிரகாரம், உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுதப்பட்டுள்ளதன் பிரகாரம் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துங்கள். பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்த தடையும் இல்லை. ஏனெனில் நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை, உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் என அனைத்தும் இருக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .