2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

ஒபாமாவின் உச்சநீதிமன்ற நீதிபதித் தெரிவு: 'கண்டுகொள்ளவே மாட்டோம்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 17 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியான அந்தோனின் ஸ்கேலியா மரணமடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கான தனது தெரிவை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்குமிடையில் மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு மன்ற நீதிபதியான மெரிக் கார்லன்ட் என்பரையே, பராக் ஒபாமா தெரிவு செய்திருந்தார். எனினும், அவரது தெரிவுக்கு செனட் சபையின் அங்கிகாரம் தேவைப்படுகின்ற நிலையில், அது குறித்து அமர்வொன்றை நடத்தப் போவதில்லை என குடியரசுக் கட்சியின் செனட் தலைவரான மிற்ச் மக்கொனலும் ஏனைய சிரேஷ்ட தலைவர்களும் அறிவித்துள்னர்.

இவ்வாண்டு நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், புதிய ஜனாதிபதியே உச்ச நீதிமன்ற நீதியரசரைத் தெரிவுசெய்ய வேண்டுமென்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. மாறாக, புதிய நீதியரசரைத் தெரிவுசெய்வதற்கான அதிகாரமும் அரசியலமைப்புப் பொறுப்பும் ஜனாதிபதிக்குக் காணப்வடுதாகச் சுட்டிக்காட்டும் ஜனநாயகக் கட்சியனர், ஜனாதிபதியின் தெரிவை அங்கிகரிக்காவிட்டாலும் பரவாயில்லை, அது குறித்து அமர்வு நடத்தப்பட வேண்டுமெனக் கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .