2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

காணொளியில் உள்ள குரல் என்னுடையதல்ல: எச். ராஜா

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் நீதித்துறையையும் பொலிஸ் துறையையும் அவமானப்படுத்தும் வகையில், இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா உரையாற்றினார் என்ற குற்றச்சாட்டுக்கு, அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக வெளிவந்த காணொளியில் உள்ள குரல், தன்னுடையதல்ல என, அவர் நேற்று (16) மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மெய்யபுரம் பகுதியில், பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மேடை அமைப்பதற்கு பா.ஜ.க மேற்கொண்ட முயற்சிகளுக்கு, பொலிஸார் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

எனினும், குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எச். ராஜா, ஒரு கட்டத்தில் பொலிஸார் மீதும் நீதித்துறை மீதும், அவதூறான விமர்சனங்களை முன்வைத்ததோடு, இறுதியில், “ஹைகோர்ட்டாவது (உயர்நீதிமன்றமாவது) ம**வது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். அது தொடர்பிலான காணொளி வெளியாகி, இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

அவரது இக்கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்தாக அமைந்துள்ளது எனவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், தொடர்ச்சியாகக் கோரப்பட்டது.

எனினும், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றுக் கலந்துகொண்ட ராஜா, “பொலிஸ், நீதித்துறைகளை மிரட்டும் தொனியில் வெளிவந்துள்ள வீடியோவில் உள்ள குரல், என்னுடையது அல்ல; யாரோ வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள்” என்று குறிப்பிட்டார். எனினும், தன்னுடைய கருத்துக்கான எந்தவோர் ஆதாரத்தையும் அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X